வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம், மருத்துவ வசதிகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்படும் – அமைச்சர் சண்முகம்..!

Coronavirus: Confined foreign workers will get paid, have medical needs and meals taken care of, says Shanmugam
(PHOTO: MINISTRY OF HOME AFFAIRS)

சிங்கப்பூர் COVID-19 பரவலை கட்டுப்படுத்த “சர்க்யூட் பிரேக்கர்” என்னும் நடவடிக்கை காலம் ஜூன் 1 வரை, அதாவது நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் தனது உரையில் ஏப்ரல் 21 அன்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஜுராங் பகுதியில் உள்ள வெஸ்ட்லைட் பாபன் (Westlite Papan) தங்கும் விடுதிக்கு வருகைதந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் K.சண்முகம்; தனது வருகையின் நோக்கம், ஊழியர்களிடம் அவர்களின் கவலைகளைப் கேட்டுப் புரிந்துகொள்வது மற்றும் அவர்களுக்கு தேவையான உத்தரவாதம் அளிப்பதும் என்றார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் எட்டு புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சகம்..!

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டுத் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் திரு சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களின் உணவு மற்றும் மருத்துவத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஒரே அறையில் அதிக நேரம் இருப்பது கடினம் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் ஊழியர்கள் அதனை புரிந்துகொள்வதாக குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான சூழல் முடிந்தபின்னர், சிங்கப்பூரில் வேலை செய்ய ஊழியர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதில் 70-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசிய திரு சண்முகம், COVID-19 பரவல் மற்ற நாடுகளிலும் நிலவுவதாகவும் அவர்களிடம் கூறினார்.

வெஸ்ட்லைட் பாபன் தங்கும் விடுதியில் தற்போது சுமார் 5,700 ஊழியர்கள் தங்கியுள்ளனர். இங்கு இதுவரை COVID-19 சம்பவங்கள் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதையும் படிங்க : COVID-19: மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!