சிங்கப்பூரில் மேலும் இரண்டு நோய்த்தொற்று குழுமங்கள் அடையாளம்!

Photo: Ooi Boon Keong/TODAY)

 

சிங்கப்பூரில் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா மருத்துவ பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா நோய்த்தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. மேலும், அந்த இடங்கள் மூடப்பட்டு, அங்கு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதிதாக இரண்டு பெரிய நோய்த்தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ‘Pfizer Asia Pacific’- என்ற நிறுவனத்தில் சுமார் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. அவர்களில் 20 பேர் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவர்.

கொரோனா பாதிப்பால் 90 வயது முதியவர் உயிரிழப்பு!

அதேபோல், ‘NSL OilChem’ என்ற நிறுவனத்தில் 27 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டது. அவர்களில் 25 பேர் நிறுவனத்தில் ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின்பெரிய நோய்த்தொற்று குழுமங்கள் தொடர்பான பட்டியலில் மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

தோ பாயோ லோரோங் 8 -ல் (Toa Payoh Lorong 8) உள்ள ஈரச்சந்தையிலும், உணவங்காடி நிலையத்திலும் நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும், நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு 1,000- ஐ கடந்தது… அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தற்போது உள்ள கொரோனா சூழலை சுகாதாரத்துறை அமைச்சகம் உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் கூறுகின்றன.