ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்து வரும் சிங்கப்பூரின் ‘மைஇந்தியா’ நிறுவனம்!

Photo: My India Singapore

 

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு மருத்துவ திரவ ஆக்சிஜன் டேங்கர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் வெண்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்களை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், உலகில் உள்ள முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவிற்கு கொரோனா நிதியுதவி அளித்து உதவினர்.

 

இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

 

இந்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகளின் தொடர் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை முடுக்கிவிடப்பட்டதன் காரணமாக தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தியாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர்களுக்கு சமூக நல ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களையும், உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப்பொருட்கள், நிவாரணத் தொகை, உணவுகளை வழங்கி உதவி வருகின்றனர்.

 

குறிப்பாக, சிங்கப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘மைஇந்தியா’ என்ற இ- காமர்ஸ் நிறுவனம் (MYINDIA PVT LTD) தமிழகத்தின் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறது. மேலும், முதியோர் இல்லங்களிலும் தொடர்ச்சியாக உணவுகளை வழங்கி வருகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவளித்து வரும் இந்த நிறுவனத்துக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

 

‘மைஇந்தியா’ நிறுவனம் (MYINDIA PVT LTD) காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், எல்இடி பல்புகள் உள்ளிட்டவைகளை https://myindia.sg/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் விற்பனை செய்து வருகிறது.

 

உலகில் எங்கிருந்தாலும் யாரு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு உதவ முடியும் என்பதை ‘மைஇந்தியா’ போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் நிரூபித்துள்ளனர்.