கொரோனா வைரஸ்: பணியிடங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சகம் கூடுதல் ஆலோசனை..!

Coronavirus: MOM, partners issue guidelines to protect workers from infection (PHOTO: CHANGI AIRPORT)

சிங்கப்பூரில் சீனா செல்லாதவர்களுக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்று பரவுவதிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க தொடர்ச்சியான மேம்பட்ட வழிகாட்டுதல்களை மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் அதன் கூட்டாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அவை மூன்று முக்கிய பகுதிகளைத் உள்ளடக்கியுள்ளது, அவை; துப்புரவு செய்வதை விரைவுபடுத்துதல், வாடிக்கையாளர்களுடன் கையாள்வது குறித்தும் மற்றும் தனிப்பட்ட ஊழியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தன்னுடைய மெழுகு சிலையை திறந்து வைத்தார் நடிகை காஜல் அகர்வால்..!

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம், MOM, NTUC மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ஆகியவற்றால் வழங்கப்பட்ட இந்த புதிய வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக தங்கள் வளாகத்தை சுத்தம் செய்தலும் அடங்கும்.

இதில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் கவுண்டர்கள் மற்றும் சிங்கப்பூர் வருகையாளர்களுக்கு விருந்தளிக்கும் அறைகள் போன்ற மனித தொடர்பு உள்ள பகுதிகளில் சுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்.

லிஃப்ட், ஹேண்ட்ரெயில், உணவு அறைகள், கழிப்பறைகள் மற்றும் குப்பைத்தொட்டி பகுதிகள் போன்ற பொது அணுகல் பகுதிகளின் தூய்மை பணியை அதிகரிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் பணியிடங்கள், சுகாதாரம் மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றவும், பரப்புவதற்கும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட தன் முதல் குடிமகனை உறுதிப்படுத்திய மலேசியா..!

உடல்நிலை சரியில்லாத வாடிக்கையாளர்களைக் கையாள்வது குறித்து முன்னணி ஊழியர்களுக்கான தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) சைனாடவுன் வட்டாரத்திற்குச் சென்றிருந்தார்.

அப்பகுதியில் உள்ள தெருக்கள், கடைகளில் தூய்மைப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டார்.