கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை..!

மருத்துவ தேவைக்கான அவசரநிலை இல்லாவிட்டால் ஊழியர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று மனிதவள அமைச்சகம் (MOM) முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“மருத்துவ வசதிகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பொறுப்பற்ற முறையில் செயல்படும் முதலாளிகளுக்கு அவர்களின் வேலை அனுமதி சலுகையை நிறுத்தி வைக்கக்கூடும்” என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி; கொரோனா வைரஸ் என அச்சம்?

ஆரோக்கியமான நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஊழியர்களை கொரோனா வைரஸ் என்னும் ‘COVID-19’ சோதனைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பக்கூடாது என்று நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை (MOM) விடுத்துள்ளது.

ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கும் நபர்களை மருத்துவமனைகள் சோதிக்காது என்று திரு டியோ முதலாளிகளுக்கு நினைவுபடுத்தினார்.

எனவே, முதலாளிகள் இதில் சமூக அக்கறையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும், என்றும் திரு டியோ கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : COVID-19 கொரோனா வைரஸ் தொற்று; விமான சேவையை குறைக்க முடிவு..!

மேலும், முதலாளிகள் தங்கள் தொழிலாளிகளின் உடல்நலத்தில் அக்கறைகொண்டு அவர்களின் உடல் வெப்ப நிலையை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது.