சிங்கப்பூரில் பொது மற்றும் தனியார் இடங்களில் ஒன்றுக்கூடத் தடை; மீறுவோருக்கு சிறை, அபராதம்..!

Coronavirus: Singapore bans public and private gatherings of any size in outbreak fight
Coronavirus: Singapore bans public and private gatherings of any size in outbreak fight

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில், தனியார் மற்றும் பொது இடங்களில் எந்தவொரு சமூக கூட்டங்களையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தனியார் விருந்து நிகழ்ச்சிகளில் ஒன்றுகூடல், நண்பர்கள், ஒரே வீட்டில் தங்கியிராத உறவினர்கள் ஆகியோருடன் பொது இடங்கள், வீவக வெற்றுத் தளங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் கூடுவதற்கு அனுமதியில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 106 பேருக்கு தொற்று உறுதி..!

மேலும் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கான அபராதங்கள், தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

முதல் முறை விதிமுறைகளை மீறும் குற்றவாளிகளுக்கு, S$10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றங்களுக்கு, S$20,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

புதிதாக வகுக்கப்பட்டுள்ள இந்த சட்டம் தற்காலிகமாக அடுத்த 6 மாதங்களுக்கு நடப்பில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறி செய்தித்தாள் வழங்க சென்றவர் மீது குற்றச்சாட்டு..!