கொரோனா வைரஸ் (Covid-19); பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் முழு செலவை ஏற்கும் சிங்கப்பூர் அரசு..!

Coronavirus: Singapore Government to foot bills of infected patients at public hospitals, except outpatient expenses (Photo: Straits Times)

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் COVID – 19 என்னும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் மருத்துவ கட்டணங்களை அரசாங்கம் செலுத்தும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

ஆனால், வெளிநோயாளிகளின் சிகிச்சை செலவு இதில் பொருந்தாது என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் புதிய 24 மணிநேரப் பயணச் சேவையை வழங்கும் கிராப்..!

கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அனைத்து நோயாளிகளும், இந்த கிருமித்தொற்று சமூகத்திற்கு பரவுவதைத் தடுக்க மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று MOH கூறியுள்ளது.

பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவமனை செலவை அரசு முழுமையாக செலுத்தும் என்றும், பொது சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக இது தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது பொது மருத்துவ கிளினிக்குகள் அல்லது பாலிக்ளினிக்ஸில் வெளிநோயாளிகளின் சிகிச்சைக்கு பொருந்தாது, மேலும் தனியார் மருத்துவ வசதிகளில் கோரப்படும் சிகிச்சைகளுக்கும் இது பொருந்தாது.

கோவிட் -19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் நோயின் அனைத்து உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளும் தற்போது பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19); சிங்கப்பூரில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி – 6 பேர் குணமடைந்துள்ளனர்..!

இருப்பினும், காப்புறுதி திட்டங்களைப் பொறுத்து, வைரஸின் விளைவாக ஏற்படும் பிற மருத்துவ செலவினங்களுக்காக சுகாதார காப்பீட்டு பாலிசிதாரர்கள் இதில் பயன்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய நோய்ப் பரவல் அவர்களது காப்புறுதித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.