பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் காகிதப் பை – சிங்கப்பூர் “Cotton On” சுற்றுசூழல் அக்கறை சார்ந்த அறிவிப்பு!

Cotton On S’pore has stopped giving out plastic bags

சிங்கப்பூரில் Cotton On ஃபேஷன் ஷோரூம் பிளாஸ்டிக் பைகளை இனி வழங்குவதில்லை, என்று அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்கு காகிதப் பைகள் $0.10 வெள்ளிக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளது.

H&M சிங்கப்பூர், பிளாஸ்டிக் பைகளை 2025 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கும் முயற்சியில் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைகளுக்கும் $0.10 வெள்ளி கட்டணமாக வசூலிக்க வேண்டும், என்று ஜூலை 15 ஆம் தேதி அறிவிப்பு செய்திருந்தது.

வாடிக்கையாளர்கள் இனி சொந்த பயன்பாட்டுக்கு அவர்களே பைகளை கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இதற்காக ஒரு அடி முன்னேறி Cotton On சிங்கப்பூர் ஃபேஷன் ஷோரூம், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு காகிதப் பைகள் மட்டும் வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதத்தில் அறிவிப்பு செய்திருந்தது.

இதற்கான அந்த ஷோரூம் வாடிக்கையாளர்களிடம் $0.10 வெள்ளி கட்டணமாக வசூல் செய்கிறது. மேலும், சொந்தமாக வாடிக்கையாளர்கள் பைகளை எடுத்துவரவும் ஊக்குவித்து வருகிறது.

இந்த புரட்சி அறிவிப்பு அனைத்து விற்பனை நிலையங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாக்க இந்த அணுகுமுறை மிக பெரிய மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.