சிங்கப்பூரில் கள்ள சிகரெட்டை எந்த வழியில் விற்றாலும் அதிகாரிகளிடம் இருந்து தப்ப முடியாது..!

Counterfeit cigarettes sales cant in any areas

சிங்கப்பூரில் கள்ள சிகரெட் எந்த வழியில் விற்பனை செய்தாலும் அதிகாரிகளிடம் இருந்து தப்ப முடியாது என்பதற்கு ஒரு சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.

கிருமித்தொற்று பரவல் காரணமாக கள்ள சிகரெட் விற்பனை செய்யும் வியாபாரிகளை தற்போது பார்ப்பது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தங்க ஆபரணங்கள் காணாமல் போனதை அடுத்து தலைமை பூசாரி கைது..!

அதிலும் கேலாங், சுங்கை காடுட் போன்ற வழக்கமான பகுதிகளில் கள்ள சிகரெட் வியாபாரிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது என்று தமிழ் முரசு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் இணைய குழுக்கள் மூலம் தொடரத்தான் செய்கின்றன என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும், அவர்கள் ஒருபோதும் சட்ட அமலாக்க அதிகாரிகளின் கண்களில் இருந்து தப்ப முடியாது என்பது அதிகாரிகளின் நடவடிக்கைகளை மூலம் நிரூபணம் ஆகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் கைது..!

இதற்கு எடுத்துக்காட்டு சம்பவமாக, அண்மையில் மாறுவேடத்தில் இருந்த சிங்கப்பூர் சுங்க துறை அதிகாரிகளிடம் கள்ள சிகரெட்டை விற்க முயன்ற 3 சீன நாட்டவர்களை அவர்கள் மடக்கி பிடித்தனர்.

அதே போல் சமீபத்தில் வயது குறைந்த வாடிக்கையாளர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ததில் சிக்கிய பத்து சில்லறை விற்பனையாளர்களின் புகையிலை சில்லறை விற்பனை உரிமங்கள் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்டதில், பிடோக் வட்டாரத்திலும் ஹவ்காங் வட்டாரத்திலும் உள்ள கடைகள் அடங்கும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வையில் கூடுதல் சலுகை – MOM..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg