COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 877 பேர் பாதிப்பு..!

COVID-19: 877 of the cases are work permit holders residing in foreign worker dormitories
COVID-19: 877 of the cases are work permit holders residing in foreign worker dormitories (Photo: NYTimes)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 12) நிலவரப்படி, புதிதாக 884 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 24,671ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சைனாடவுனில் ஆயுதங்களுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அதன் தொடர்பில் மேலும் 9 பேர் கைது..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 3 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் வேலை அனுமதி பெற்றவர் ஒருவர் அடங்குவர்.

புதிய குழுமங்கள்

மேலும் 7 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • 45 Kian Teck Drive
  • 3 Loyang Way 6
  • 36 Senoko Road
  • 7 Senoko South Road
  • 3 Sungei Kadut Avenue
  • 46 Tech Park Crescent
  • 5 Woodlands Industrial Park E1

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மிக அதிக எண்ணிக்கையாக ஒரே நாளில் 626 பேர் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்..!