COVID-19: சிங்கப்பூரில் மேலும் 900-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்..!

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 998 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மே 17) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 9,340 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சாங்கி விமான நிலைய முனையம் நான்கின் சேவை தற்காலிகமாக நிறுத்தம்..!

மேலும் 1,210 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர் மேலும் 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 17,466 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 682 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!