தடுப்பூசி மருந்துகள் மலிவு, சமமான முறையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் லீ

affordable and equitable access to vaccines
(MCI Photo From Pm Lee FB Page)

சிங்கப்பூர் சிறிய நாடு, அதனால் பருவநிலை மாற்றத்தை சுயமாக சரிசெய்ய முடியாது என்று சவுதி அரேபியா நடத்திய இணையம்வழி G20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் லீ சியென் லூங் கூறினார்.

மாநாட்டின் இரண்டு நாட்களில், தொற்றுநோயை எவ்வாறு சமாளிப்பது, வளர்ச்சி மற்றும் வேலைகளை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது பற்றி கலந்துரையாடினர்.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 34,000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு – தடுப்பு பொருட்கள் வழங்கல்!

மேலும், அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி கலந்துரையாடியதாக பிரதமர் லீ முகநூலில் குறிப்பிட்டார்.

உலகளவில் இந்த COVID-19 பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது நம்முடைய கடைசி சுகாதார நெருக்கடியாக இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி மருந்துகள் மலிவு மற்றும் சமமான முறையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நியாயமான, நிலையான சர்வதேச ஒழுங்கை உருவாக்க பன்முகத்தன்மையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

COVID-19 பாதிப்புள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அது வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூர் நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்!

சிங்கப்பூரிலிருந்து சென்னை, கோவை, திருச்சி செல்லும் விமானங்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…