COVID-19: அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு..!

COVID-19: All foreign worker dormitories to have medical teams
COVID-19: All foreign worker dormitories to have medical teams of doctors and nurses from hospitals, polyclinics

மருத்துவமனைகள் மற்றும் பாலிக்ளினிக்குகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்கள் இந்த வாரத்தின் மையப்பகுதியில் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர் தங்குமிடங்களுக்கும் அனுப்பப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளது.

இதில் ஏழு முதல் எட்டு குழுக்களை ஏற்கனவே அங்கு உள்ளதாகவும், மேலும் 15 முதல் 18 குழுக்கள் செவ்வாய்க்கிழமை செல்வதாகவும் MOH மருத்துவ சேவைகள் இயக்குனர் கென்னத் மாக் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது இனி கட்டாயம் – மீறினால் அபராதம்..!

தங்கும் விடுதிகளின் அளவு மற்றும் அங்கு உள்ள தேவைகளின் அடிப்படையில், ஒன்று முதல் மூன்று மருத்துவர்கள் மற்றும் குறைந்தது மூன்று செவிலியர்கள் வரை இந்த குழுக்களில் பணியாற்றுவார்கள் என்று மேக் கூறியுள்ளார்.

இந்த மருத்துவ நிபுணர்கள், வெளிநாட்டு ஊழியர்களை ஆதரிக்க விருப்பத்துடன் முன்வந்துள்ளனர், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில், தங்கியுள்ள ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கும், COVID-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முக்கிய முன்னுரிமை தரப்படுவதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!