கட்டுமானத் துறையில் உள்ள வேலை அனுமதி மற்றும் S Pass வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!

Covid-19 vaccination Work passes condition approval
(Photo: TODAY)

கட்டுமானத் துறையில் உள்ள வேலை அனுமதி மற்றும் S Pass வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) ஊடக வெளியீட்டில் மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் கட்டிட மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) அறிவித்துள்ளன.

சிங்கப்பூரில் COVID-19 பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு, ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் தங்கும் விடுதிகளில் அதிக அளவில் உள்ளன. மேலும், கட்டுமானத் தளங்களிலும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுமான ஊழியர்களிடையே COVID-19 கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதுவரை, தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் ஊழியர்களின் மத்தியில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்றுகள் குறைவாகவே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய தொடர்புகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் MOM மற்றும் BCA தெரிவித்துள்ளன.

எந்தவொரு தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு பொருந்தும்.

இதில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களாக அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதிகளைத் தவிர மற்ற வகையான வசிப்பிடங்களுக்கும் கட்டாய உத்தரவு பொருந்தும்.