COVID-19 சிங்கப்பூரில் இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

COVID-19: another 994 patients were discharged in Singapore
COVID-19: another 994 patients were discharged in Singapore (Photo: TODAY)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 994 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு அன்பளிப்புப் பொட்டலங்கள்..!

மொத்தம் 14,876 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 690 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 16,027 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் மேலும் 548 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிப்பு..!