COVID-19: வெளியில் சுற்றித்திரிந்த தனிமைப்படுத்தப்பட்டவர்கள்; சிங்கப்பூரில் இருந்து வந்தவர் உட்பட இருவா் மீது வழக்குப் பதிவு..!

COVID-19: Case filed against two people flirting outside in Tamil Nadu
COVID-19: Case filed against two people flirting outside in Tamil Nadu

தமிழகம்: பெரம்பலூா் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் பட்டியலில் இருந்து, வெளியே சுற்றித் திரிந்த இருவா் மீது போலீசார் நேற்று வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதில் சிங்கப்பூரில் இருந்து வந்த நபர் ஒருவரும் அடங்குவார்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 564 போ் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். தனிமைப்படுத்தப்பட்ட நபா்களில் பெரும்பாலானோா் வீடுகளில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணியாற்றிய, திருமணம் நிச்சயிக்கப்பட்ட தமிழக இளைஞர் விபத்தில் பலி..!

அதனை தொடர்ந்து சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில் அந்த குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலை மீறி வெளியே சுற்றித்திரிந்த சிங்கப்பூரில் இருந்து வந்த பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலம் கே.கே. நகரைச் சோ்ந்த மருதமுத்து மனைவி செல்வமணி (54) என்பவரை கைது செய்தனர்,

அதே போல், துபாயில் இருந்து வந்திருந்த செட்டிக்குளம் அருகேயுள்ள சத்திரமனை கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ் (26) என்பவரையும் பெரம்பலூா் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அந்த இருவா் மீதும் தொற்றுநோய் பரப்பக் காரணமாக இருந்ததற்கான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : சென்னையில் 506 விமான சேவைகள் முற்றிலும் ரத்து; சிங்கப்பூரிலிருந்து சரக்கு விமானம் இயக்கம்..!