சிங்கப்பூரில் புதிதாக 555 பேருக்கு தொற்று – தங்கும் விடுதியில் வசிக்கும் 64 பேர் பாதிப்பு

(Photo: MOM)

சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (செப். 11) நிலவரப்படி 555 பேருக்கு புதிதாக கோவிட் -19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 486 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், 64 பேர் தங்கும் விடுதியில் வசிப்பவர்கள் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!

இந்த உள்நாட்டு பாதிப்புகளில், 145 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் உட்பட மேலும் இரண்டு பெரிய குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் குழுமத்தில் மொத்தம் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 58 பேர் கடைக்காரர்கள், மற்றும் உதவியாளர்கள், நான்கு கிளீனர்கள், ஒரு பாதுகாப்பு இடைவெளி தூதுவர் மற்றும் ஊழியர்களின் மூன்று வீட்டு தொடர்புகள்.

அங்கு பணிபுரியும் அனைவருக்கும் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

உள்நாட்டு பாதிப்புகளை தவிர்த்து, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சிங்கப்பூரின் தினசரி எண்ணிக்கை 555ஆக உள்ளது.

புகைப்பித்தல் தொடர்பாக போலிஸ் அதிகாரியை இழிவுபடுத்திய பெண்களுக்கு அபராதம்!