வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவருக்கு புதிதாக தொற்று!

(PHOTO: MOM)

சிங்கப்பூரில் இன்றைய (ஏப்ரல் 11) மதிய நிலவரப்படி, புதிதாக 20 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று உள்ளூர் அளவில், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 329 பேர் கைது

மீதமுள்ள அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் தனிமையில் வைக்கப்பட்டனர் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமூக அளவில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

சிங்கப்பூரில் இதுவரை இந்த கிருமித்தொற்றால் மொத்தம் 60,653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும்.

அப்பர் புக்கிட் திமாவில் மரத்தில் இறந்த நிலையில் தொங்கிய ஆடவர்