சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்

Covid-19 cases visited Singapore
(Photo: capitaland via TODAY)

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களை சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய பட்டியல்:

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இரவு 7.40 மணி முதல் இரவு 8.25 மணி வரை ராஃபிள்ஸ் சிட்டி (Raffles City) ஷாப்பிங் சென்டர்

கல்லாங் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி ஆடவர் உயிரிழப்பு

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அன்று இரவு 9.05 மணி முதல் இரவு 9.40 மணி வரை செம்பவாங் மார்ட்டில் (511 கான்பெர்ரா சாலை) NTUC FairPrice சூப்பர் மார்க்கெட்

பாதிக்கப்பட்ட நபர்களின் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு ஏற்கனவே தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக MOH கூறியுள்ளது.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துவாஸ் தீ விபத்து: 3 ஊழியர்கள் உயிரிழப்பு – 5 பேர் ஆபத்தான நிலையில்…