சிங்கப்பூரில் 8வது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

COVID-19: Cochrane Lodge 2 dormitory declared an isolation area
COVID-19: Cochrane Lodge 2 dormitory declared an isolation area (Photo: Screengrab: Google Maps)

சிங்கப்பூரில் எட்டாவது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

செம்பவாங்கில் உள்ள Cochrane Lodge 2 தங்கும் விடுதி தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரில் உங்களின் கடின உழைப்பிற்கு நன்றி ” – தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய அமைச்சர் ஜோசபின் தியோ..!

இது நேற்று திங்கள்கிழமை (ஏப்ரல் 13) முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது 49 அட்மிரால்டி ரோடு வெஸ்டில் உள்ள Cochrane Lodge 2-இல், பிளாக்ஸ் A, B, C, D, மற்றும் E ஆகியவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திங்களன்று, மேலும் எட்டு COVID-19 சம்பவங்கள் Cochrane Lodge 2-இல் உள்ள குழுவுடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மொத்தம் 25 நபர்கள் வைரஸ் தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மை நிலவரப்படி, சிங்கப்பூரில் தங்கும் விடுதிகள் தொடர்புடைய COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, Cochrane Lodge 2 தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 24 பேரின் வேலை அனுமதி ரத்து..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil