சமூக அளவில் இந்த வாரம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது

(photo: Fb)

முந்தைய வாரத்தில் சமூக அளவில் 238ஆக இருந்த ஒட்டுமொத்த புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த வாரத்தில் 1,027ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் MOH தெரிவித்துள்ளது.

அதே போல, சமூகத்தில் தொடர்பு கண்டறியப்படாத பாதிப்பு முந்தைய வாரத்தில் 17 ஆக இருந்தது, கடந்த வாரத்தில் 120ஆக அது அதிகரித்துள்ளது.

சிகரெட்டு துண்டை தூக்கி வீசியதால் ஏற்பட்ட தீ – இந்திய ஊழியருக்கு சிறை

மொத்தம் 490 பேர் மருத்துவமனையில் உள்ளனர், மிகச் சிறந்த கண்காணிப்பில் அவர்கள் உள்ளனர்.

ஆக்ஸிஜன் கூடுதலாக தேவைப்படும் நிலையில் 12 பேர் உள்ளனர், மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் ஒருவர் உள்ளார். இந்த13 பேரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

தடுப்பூசி போடப்படாத அல்லது முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட ஒன்பது பேர், மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தடுப்பூசி கடுமையான நோயைத் தடுக்க உதவுகிறது என்பதற்கு தொடர்ந்து சான்றுகள் உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக பெண் மரணம்.!