சிங்கப்பூரில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது இனி கட்டாயம் – மீறினால் அபராதம்..!

COVID-19: Compulsory to wear mask when leaving the house, says Lawrence Wong
COVID-19: Compulsory to wear mask when leaving the house, says Lawrence Wong

சிங்கப்பூரில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) அறிவித்துள்ளார்.

இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும், COVID-19 பரவலை கட்டுப்படுத்துவதன் தொடர்பான அமைச்சக பணிக்குழு கூட்டத்தில் பேசிய திரு வோங் இதனை கூறினார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

முகக் கவசம் அணிய தவறியவர்களுக்கு, முதல் குற்றத்திற்கு S$300 அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் இரண்டாவது முறையாக விதியை மீறுபவர்களுக்கு S$1,000 அபராதம் விதிக்கப்படும். மோசமான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்படும், என்றார்.

மேலும், இந்த விதிகளை மீறும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களின் வேலை அனுமதி அல்லது நிரந்தரவாசி உரிமம் ரத்து செய்யப்படலாம்.

இது அனைத்து வேலையிட வளாகங்களுக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் முகக் கவசம் அணியத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

கூடுதலாக, “நீங்கள் முடிந்தவரை வெளியே செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருங்கள், சுகாதாரத்தை கடைபிடியுங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் புதிதாக மேலும் 334 பேர் பாதிப்பு – மொத்தம் 3,000ஐ தாண்டியது..!