சிங்கப்பூரில் கொரோனாவால் புதிதாக 10 பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்

(PHOTO: KHOO TECK PUAT HOSPITAL/FACEBOOK)

சிங்கப்பூரில் நேற்றைய (அக். 11) நிலவரப்படி, கொரோனாவால் புதிதாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள், அவர்கள் 73 முதல் 93 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள குழந்தைகளை பார்க்க முடியாமல் புற்றுநோயால் அவதிப்பட்ட தாய் – கடைசி ஆசையை நிறைவேற்றிய சிங்கப்பூர்

அதில் ஏழு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவர்.

அவர்களில், நான்கு பேர் கோவிட் -19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, மேலும் மூன்று பேர் முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்கள்.

மீதமுள்ள மூன்று பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 172ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் விடுதி உட்பட 2 குழுமங்கள் கண்காணிப்பில்… விடுதியில் மொத்தம் 237 பாதிப்புகள் பதிவு