12 பேருடன் உணவகத்திற்கு சென்ற புதிதாக பாதிக்கப்பட்ட தொற்று நோயாளி!

COVID-19 dinner family members
COVID-19 case had dinner with 12 family members (PHOTO: Google Street View)

சிங்கப்பூரில் நேற்று (நவம்பர் 26) சமூக அளவிலான ஒரு புதிய COVID-19 பாதிப்பு பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டது.

அந்த புதிய தொற்று பாதிக்கப்பட்ட நபர், தனது 12 குடும்ப உறுப்பினர்களுடன் தெம்பனீஸ் மாலில் (Tampines Mall) உள்ள Seoul Garden-க்கு இரவு உணவிற்காக சென்றதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி இனி DBS வங்கி கிளைகளாக செயல்படும்!

கிருமித்தொற்று சோதனையில் உறுதி

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நவம்பர் 21ஆம் தேதி நடந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த ஆடவர், 32 வயதான சிங்கப்பூரர் ஆவார். அவருக்கு கடந்த நவம்பர் 23ஆம் தேதி இரவு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது.

பின்னர், நவம்பர் 25ஆம் தேதி COVID-19 சோதனையில் அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்று MOH கூறியுள்ளது.

ஒன்றுகூடல்

நவம்பர் 21ஆம் தேதி Seoul Garden உணவு நிலையத்தில் மூன்று மேஜைகளில் அவரின் குடும்பம் அமர்ந்திருந்ததாகவும், அவர்கள் ஒன்றிணைந்ததாகவும் MOH கூறியுள்ளது.

இரவு விருந்தில் இருந்தவர்களில் இரண்டு வயது குழந்தையும் அடங்கும். முன்னதாக ஐந்து நாள் மருத்துவ சான்றிதழ் அந்த குழந்தைக்கு வழங்கப்பட்டு இருந்தது.

பின்னர், குழந்தைக்கு கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

விசாரணை

பாதுகாப்பான நடவடிக்கைகளில் ஏதேனும் மீறல் இருந்ததா என மதிப்பிடுவதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று MOH கூறியுள்ளது.

அனைவரும் சமூக பொறுப்புடன் தொடர்ந்து நடந்துகொள்ளவும் , நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவும் MOH கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூர் ராபின்சன்ஸ் கிளைகளில் 70% வரை அதிரடி “Black Friday” தள்ளுபடி விற்பனை!

வரும் வாரங்களில் முக்கிய விநியோக நிறுவன ஊழியர்களுக்கு COVID-19 சோதனை – MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…