மன அழுத்தம் மற்றும் தனிமையில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள் – வெளியே செல்ல எப்போது அனுமதி?

(Photo: Dailytimes)

தங்கும் விடுதிகளில் கோவிட் -19 கிருமித்தொற்று பரவிய உச்சக் காலக்கட்டத்தில், வெளிநாட்டு ஊழியர்கள் மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டதாக அல்லது நீண்டகால தனிமையின் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானதாக TODAY குறிப்பிட்டுள்ளது.

ஒரு வருடமாக, தங்கும் விடுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அவற்றின் குடியிருப்பாளர்களுக்கு மாறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

முகக்கவசத்தை அகற்றி காவல்துறை அதிகாரி மீது வேண்டுமென்றே இருமிய ஆடவருக்கு 14 வார சிறை!

சில வெளிநாட்டுத் ஊழியர்கள் முன்பு இதுபோன்ற கவலை அடைந்ததில்லை என்று TODAYடம் கூறினர், ​​மற்றவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தை சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ஊழியர்

காக்கி புக்கிட்டில் உள்ள லியோ தங்கும் விடுதியில் வசிக்கும் 28 வயதான பராமரிப்பு ஊழியர் திரு வீரன் ஹரிபிரசாத் கூறுகையில், சர்க்யூட் பிரேக்கர் காலக்கட்டத்தின் போது, ​​கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட இறப்புகளைப் பற்றி கேள்விப்பட்டபின் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறினார்.

வேலைக்குச் செல்ல முடியாத சூழலும், தனது பொருளாதாரத்தை எப்படி திரட்ட போகிறோம் என்ற கவலையும் அவரை சூழ்ந்ததாக கூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், இந்திய நாட்டினரால் மீண்டும் பணியைத் தொடங்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

அல் அமீன் என்பவரின் கூற்று

மேலும் திரு அல் அமீன் என்பவர் கூறுகையில், தனது மன அழுத்த நிலை இப்போது “100 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக” குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் தொற்றுநோயிலிருந்து தப்பிப்போமா என்று கவலைப்பட்ட அவர், இப்போது வேலையின் போது எதிர்கொள்ளும் அழுத்தங்களை போக்க எந்த வழியும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

16 பேர் கொண்ட ஒரு அறையில், வேலை முடிந்து திரும்பும் போது மன புத்துணர்ச்சிக்கு அமைதியான சூழலை கண்டுபிடிப்பது என்பது கடினம் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒருவரின் செயல்பாடு இன்னொருவருக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் அவரது அறை தோழர்களிடையே சச்சரவுகள் பொதுவானவை என்று திரு அல் அமீன் கூறினார்.

வெளியே செல்ல அனுமதி?

வெளிநாட்டு ஊழியர்களிடையே தற்போது உள்ள ஒரே கேள்வி “நாங்கள் எப்போது வெளியே செல்வோம்”, அதற்கான பதிலை மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

இன்னும் குறைவான காலத்தில் மாதம் ஒரு முறை, தங்கும் விடுதிகளில் வசிப்போர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியே செல்ல அனுமதிக்கலாம் என்று அமைச்சகம் கூறியிருக்கிறது.

தங்கும் விடுதிகளில் வசிப்போர் அதிகமானோர் குணமடைந்தவர்கள் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் தொற்று பரவல் வெகுவாகக் குறையும்.

அப்போது கட்டுப்பாடுகள் கூடுதலாக தளர்த்தப்படலாம் என்று MOM பேச்சாளர் TODAYம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட முதல் பொது பேருந்துகள் – சோதனை தொடக்கம்!