சிங்கப்பூரில் மேலும் 5 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

COVID-19: Five more foreign worker dormitories declared as isolation areas
COVID-19: Five more foreign worker dormitories declared as isolation areas (Screengrab: Google Maps)

சிங்கப்பூரில் COVID-19 பரவுவலைத் தடுக்கும் நோக்கில் மேலும் ஐந்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Avery Lodge, Cassia @ Penjuru, Westlite Mandai Dormitory, PPT Lodge 1A, மற்றும் Jurong Penjuru Dormitory 1 ஆகியவை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் சுகாதார அமைச்சின் (MOH) அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு சங்கர் மகாதேவனின் காணொளி..!

இந்த ஐந்தையும் சேர்த்து மொத்தம் 18 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Avery Lodge மற்றும் Cassia @ Penjuru-க்கான அறிவிப்புகள் இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

அதே நேரத்தில் Westlite Mandai தங்கும் விடுதி, PPT Lodge 1A மற்றும் Jurong Penjuru தங்கும் விடுதி 1 ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

  • 2D Jalan Papan-இல் உள்ள Avery Lodge நிர்வாக அலுவலகக் கட்டங்கள் உட்பட, A1, A2, B, C, D, E1, E2 வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
  • Penjuru Walk-இல் உள்ள Cassia @ Penjuru – 11, 13, 15, 17, 19, 21 ஆகிய வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
  • Mandai Estate-இல் உள்ள Westlite Mandai தங்குவிடுதி – 32, 34, 36 ஆகிய வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
  • 8 Seletar North Link-இல் அமைந்திருக்கும் PPT Lodge 1A – A, B, C, D ஆகிய வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
  • Penjuru Place-இல் அமைந்திருக்கும் Jurong Penjuru Dormitory 1 – 50, 52, 54, 56, 60 ஆகிய வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : COVID-19: 650,000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வீட்டு பணியாட்களுக்கு இலவச முகக் கவசங்கள்..!