சிங்கப்பூரில் 13வது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

COVID-19: Foreign worker dormitory Kranji Lodge 1 declared isolation area
COVID-19: Foreign worker dormitory Kranji Lodge 1 declared isolation area (Photo: Vobis Enterprise)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பரவல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் கிரான்ஜி லாட்ஜ் 1 (Kranji Lodge 1), வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அரசிதழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

Tuas View Dormitory, Shaw Lodge Dormitory மற்றும் நார்த் கோஸ்ட் லாட்ஜ் போன்றவை தனிமைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, Kranji Lodge 1 தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்யப்படும் 13வது தங்கும் விடுதி ஆகும்.

நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 12 கிரான்ஜி ரோட்டில் உள்ள கிரான்ஜி லாட்ஜில், மேலும் 18 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மொத்தமாக அங்கு உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது வரை 41ஆக உள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 சம்பவங்களின் பெரும் பகுதி வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 9வது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!