COVID-19: சிங்கப்பூரில் 4 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் – சுகாதார அமைச்சகம்..!

COVID-19: Four new clusters have also been identified
COVID-19: Four new clusters have also been identified (Photo: Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 18) நிலவரப்படி, புதிதாக 305 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 28,343ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 495 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புதிய சம்பவங்களில் சமூக அளவில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் 99 சதவீதம், முன்பு அறியப்பட்ட நோய் குழுமங்களுடன் தொடர்பு உள்ளதாகவும் MOH தெரிவித்துள்ளது.

புதிய குழுமங்கள்

சிங்கப்பூரில் 4 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • 2 Kampong Ampat
  • 43 Tuas View Close
  • 117 Tuas View Walk 1
  • Woodlands Industrial Park E1

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள்..!