தங்கும் விடுதிகளில் புதிய 4 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் – 400க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

COVID-19: Four new dormitory clusters were identified
COVID-19: Four new dormitory clusters were identified

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 482 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 25,368 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் – மலேசியா இடையேயான பயணம் மீண்டும் தொடங்குவதற்கு முன் தேவையான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்..!

மேலும் 269 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 12,634 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் புதிய 4 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை,

  • 216 Tagore Lane
  • 9B Tech Park Crescent
  • 16 Tech Park Crescent
  • 115 Tuas View Walk 1

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!