COVID-19: விதிகளை மீறிய 6 பேருக்கு தலா S$3,000 அபராதம் விதிப்பு!

COVID-19
(PHOTO: MOM/FB)

லசாரஸ் (Lazarus) தீவில் 12 பேர் கூடிய கூட்டத்தில் பங்கேற்ற 6 பேருக்கு COVID-19 சட்ட விதிகளை மீறியதற்காக இன்று (நவம்பர் 26) தலா S$3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்படாத நோக்கம், COVID-19 விதிமுறைகளின் கீழ் நியாயமான காரணமின்றி மற்றவர்களைச் சந்தித்ததற்காக இந்த ஆறு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

குழந்தையுடன் கவலை மறந்து விளையாடும் வெளிநாட்டு ஊழியர்கள்

அவர்கள் 5 பேர், 30 முதல் 32 வயதுக்குட்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர்கள் என்றும் மீதமுள்ளவர் 29 வயதான நபர் சிங்கப்பூரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முதலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் S$3,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் உள்ளடக்கிய அந்த பயணத்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த புகைப்படங்கள் பல்வேறு ஊடக தளங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததாகவும் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

COVID-19 விதிமுறையை மீறியதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறை, S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தேக்கா நிலையம், அதைச் சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கு கொரோனா சோதனை!

டிசம்பர் மாதத்திற்கான இந்தியா-சிங்கப்பூர் செல்லும் இருவழி விமானங்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…