பாதுகாப்பு விதிகளை மீறிய 234 பேருக்கு அபராதம் – 4 கடைகளை மூட உத்தரவு

COVID-19 measures breaches fine
(Photo: National Parks Board)

சீன புத்தாண்டு பண்டிகை காலத்தில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக மொத்தம் 234 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிகளை மீறிய அவர்களுக்கு தலா S$300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சோங் பகார் விபத்து: காதலனை காப்பாற்ற முயன்று தீயில் சிக்கிய பெண் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றம்

இதில் எட்டுக்கும் மேற்பட்டோர் குழுக்களில் ஒன்றாக கூடியது மற்றும் குழுக்களுக்கிடையில் ஒன்றிணைதல் ஆகியவை அடங்கும் என்று நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று (பிப்ரவரி 24) தெரிவித்துள்ளது.

சாங்கி கடற்கரை பூங்காவில், ஒரே குழுவில் ஒன்றுகூடிய 20 பேர் உட்பட 76 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அனைத்து குற்றங்களும் பிப்ரவரி 13, 14, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தேசிய பூங்காக்கள் வாரியத்தால் நிர்வகிக்கப்படும் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் நடந்தன.

கூடுதலாக, COVID-19 விதிமுறைகளை மீறிய 4 உணவு மற்றும் பானங்கள் (F&B) கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டன.

மேலும், இந்த மீறலில் சிக்கிய 13 உணவு-பானக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

துவாஸ் பகுதியில் தீ – 8 பேர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!