வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் சுமார் 450,000 பேருக்கு தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள்..!

COVID-19 migrant local workers
More than 450,000 contact-tracing devices to be distributed (Photo: MOM)

சிங்கப்பூரில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஊழியர்கள் சுமார் 450,000 பேருக்கு தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் அல்லது பணிபுரியும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கும், கட்டுமானம், கப்பல் தளம் மற்றும் உற்பத்தி துறைகளில் பணிபுரிபவர்களுக்கும், சுமார் 450,000க்கும் மேற்பட்ட தொடர்பு-தடம் கண்டறியும் சாதனங்கள் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : உரிய வேலை அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 12 பேர் கைது..!

எல்லா நேரங்களிலும் ஊழியர்கள் இந்த கருவியை வைத்திருக்கும்போது, COVID-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களின் நெருங்கிய தொடர்புகள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனங்கள் நாளை அக் .18 முதல் கட்டங்கட்டமாக விநியோகிக்கப்படும், மேலும் இதன் விநியோகம் நவம்பர் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மனிதவள அமைச்சு (MOM) கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) மற்றும் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) ஆகியவை கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

BluePass டோக்கன்கள் என அழைக்கப்படும் இந்த கருவிகள், தங்கும் விடுதி மற்றும் வேலையிட சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கச்சிதமானதாகவும், நீர் நுழையாவண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எல்லா நேரங்களிலும் அணியலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பரிசோதனைகள் மையங்களில் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் சோமர்செட் MRT நிலையத்தில் தீ – 2 பேர் மருத்துவனையில் அனுமதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…