COVID-19: முதல் நாளில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு இடைவெளி மீறல்கள்..!

COVID-19: More than 7,000 breaches of elevated safe-distancing measures on Day 1 of 'circuit breaker'
COVID-19: More than 7,000 breaches of elevated safe-distancing measures on Day 1 of 'circuit breaker' (Photo: MEWR)

சிங்கப்பூரில் முழுவதும் சர்க்யூட்-பிரேக்கர் எனப்படும் ஊரடங்கு நடவடிக்கையின் முதல் நாளில் 7,000-க்கும் மேற்பட்ட எழுதுவடிவிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு மாத கால மேம்பட்ட பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் போலீஸ் அறிவுரையை கேட்க மறுத்த முதியவர்; தொடர்ந்து சச்சரவில் ஈடுபட்டதால் கைது..!

இந்த ஆலோசனைகளில் பெரும்பாலானவை ஹாக்கர் நிலையங்கள் (hawker centres) மற்றும் சந்தைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகம் (MEWR) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

தரையில் அமைக்கப்பட்டுள்ள குறிகளை முறையாக பின்பற்ற தவறியதுடன், பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்கக் தவறியதும் இந்த மீறல்களில் அடங்கும் என்று MEWR கூறியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளின் கீழ், உணவகங்களில் வாங்கி செல்வது அல்லது டெலிவரி சேவைகளை வழங்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் மீறினால், சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக எழுத்துப்பூர்வ ஆலோசனையை வழங்குவார் என்று MEWR கூறியுள்ளது.

பொதுமக்கள் இதற்கு இணங்கவில்லை அல்லது அதே குற்றத்தைச் திரும்பவும் செய்தால், மீறியவரின் விவரங்களை சேகரித்து எழுத்துப்பூர்வமான கடுமையான எச்சரிக்கை அதிகாரி வழங்குவார். அதற்கு பின்பு காவல்துறையிடமும் தகவல் கொடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவின் கீழ், முதல் முறை குற்றம் புரியும் குற்றவாளிகளுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றங்களுக்கு S$20,000 வரை அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பொது மற்றும் தனியார் இடங்களில் ஒன்றுக்கூடத் தடை; மீறுவோருக்கு சிறை, அபராதம்..!