சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை – MOM

COVID 19: No spike in number of migrant worker suicides, says MOM. (image credit : Reuters)

சிங்கப்பூரில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டு ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

மேலும், சமீபகாலமாக தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து மனிதவள அமைச்சகம் அறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டு ஊழியர்கள் தற்கொலைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என்றாலும், நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம், ஊழியர்களுக்கான எங்கள் மனநல உதவித் திட்டங்களை மேம்படுத்த எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியருக்கான சில உதவி எண்கள்

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதத்தில் தங்குமிடங்களில் வசிக்கும் 300,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளனர்.

மேலும், சமீபத்திய வாரங்களில், இயற்கைக்கு மாறான மரணங்கள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து, ஊழியர்களின் மன ஆரோக்கியம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

MOM அதன் ஆதரவு குழுக்களுடன், தங்குமிடங்களில் மனநல ஆலோசகருடன் ஊழியர்களிடம் பேசுவதன் மூலம் பயனடையக்கூடும் என்று அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சக ஊழியர் தன்னை விட சிறப்பாக நடத்தப்படும் வெறுப்பில் வாகனத்தை சேதப்படுத்தியவருக்கு அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg