COVID-19: சிங்கப்பூரில் இரண்டாம் கட்டத் தளர்வு வரும் ஜூன் 18 தொடக்கம்..!

COVID-19: Phase 2 of reopening to start from Jun 19
COVID-19: Phase 2 of reopening to start from Jun 19 (PHOTO: Getty Images)

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வின் 2ஆம் கட்டம் (Phase 2 of reopening) வரும் ஜூன் 18, இரவு 11.59 மணிக்குப் பிறகு தொடங்கும் என்று COVID-19 பல அமைச்சக பணிக்குழு இதனை அறிவித்துள்ளது.

பணிக்குழு நிலைமையை மறுபரிசீலனை செய்து முடிவெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் கட்டங்கட்டமாக வேலைக்குத் திரும்ப அனுமதி..!!

முதல் கட்டத்தின் போது, வேலையிட நடவடிக்கைகள் அதிகரித்த போதிலும் சமூக அளவிலான தொற்று விகிதங்கள் பொதுவாக நிலையானதாகவே இருக்கின்றன என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளில் தொற்று சம்பவங்கள் குறைந்துவிட்டதாகவும், மேலும் பெரிய புதிய நோய் பரவல் குழுமங்கள் எதுவும் இல்லை என்றும் MOH கூறியுள்ளது.

இந்த 2ஆம் கட்டம், பாதுகாப்பான இடைவெளிக் விதிமுறைகளுக்கு உட்பட்டு பெரும்பாலான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதை உள்ளடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிர்வாக நெறிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம் இன்னும் அதிகமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்கள் தொடர்ந்து பகிரப்படும் இணைப்பில் இருங்கள்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 214 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg

??Telegram  – https://t.me/tamilmicsetsg

?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg