சிங்கப்பூரின் 2ஆம் கட்டத் தளர்வு – மீண்டும் திறக்கப்படவுள்ள விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள்…!

Pasir Ris, Sembawang beaches No swimming
(Photo: Mothership)

சிங்கப்பூரின் 2ஆம் கட்ட தளர்வில், விளையாட்டு மைதானங்களும் கடற்கரைகளும் மீண்டும் திறக்கப்படும் என்று பொது சேவை பிரிவு (PSD) புதன்கிழமை (ஜூன் 17) தெரிவித்துள்ளது.

பொது வீட்டுத் தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் பெரும்பாலான விளையாட்டு வசதிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டத் தளர்வு : சில விளையாட்டுகள் மீண்டும் தொடங்க அனுமதி..!

இருப்பினும், 2ஆம் கட்டத்தின் தொடக்கத்தில் நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்பட்டு இருக்கும், பின்னர் படிப்படியாக திறக்கப்படும் என்று PSD ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்று PSD கூறியுள்ளது.

விளையாட்டு மைதானங்கள், ஸ்கேட் பூங்காக்கள், மீன்பிடி பகுதிகள், dog runs, கடற்கரைகள், கார் நிறுத்துமிடங்கள் ஆகியவை நாளை முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் இயற்கை பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள உணவு மற்றும் பானம் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – சில்லறை வர்த்தகங்களுக்கான குறிப்பிட்ட நிபந்தனைகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      https://twitter.com/tamilmicsetsg

??Telegram  https://t.me/tamilmicsetsg

?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg