சிங்கப்பூரில் 23 வயது ஆடவர் உட்பட கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 15 பேர் உயிரிழப்பு

Pic: Roslan RAHMAN/AFP

சிங்கப்பூரில் 23 வயது ஆடவர் ஒருவர் உட்பட கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 வயது ஆடவர் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 34 வயதான ஆடவரும் அடங்குவர்.

லாரி டிரைவரின் அலட்சியத்தால் இருவர் பலி!

இருவருக்கும் பல அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறந்த மற்ற 13 நபர்கள் 60 முதல் 89 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 8 பேர் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

மேலும் ஐந்து பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்தமாக, சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று காரணமாக 207 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு சுமார் 20 மணி நேரம் வேலை வாங்கிய நிறுவனங்கள் – MOM அதிரடி நடவடிக்கை