கட்டுப்பாடு தளர்வுகள் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே..!

(Photo: AFP/Roslan Rahman)

அடுத்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் சில COVID-19 கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தளர்வுகள் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே இருக்கும் என்று அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

கூடைப்பந்து உலோக அமைப்பு விழுந்ததில் இளையர் மரணம்

நேற்று (ஜூலை 26) பாராளுமன்றத்தில் அறிக்கையை வெளியிட்ட திரு வோங், அடுத்த மாதம் தொடக்கத்தில் ஒட்டுமொத்த தொற்று நிலைமையையும் பணிக்குழு மதிப்பிடும் செய்யும் என்றார்.

அதற்குள், மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் கோவிட் -19 தடுப்பூசிகளை முழுமையாக போட்டிருப்பார்கள் என்று திரு வோங் கூறினார்.

எனவே, நோய்பரவல் குழுமங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் குறைவாக இருந்தால், கட்டுப்பாடுகளை எளிதாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

“ஆனால் தளர்வுகள் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வேறுபடுத்தப்பட்டு நீட்டிக்கப்படும்.”

“ஏனென்றால், அவை கிருமி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது” என்றும் திரு வோங் கூறியுள்ளார்.

முழுமையான விவரங்கள் அடுத்த மாதம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டினருக்கு நற்செய்தி: செப்டம்பரில் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம்..!