சட்டத்தை மீறிய 2 மதுபானக் கடைகளுக்கு அபராதம் – 10 நாட்களுக்கு மூட உத்தரவு

COVID-19 rules breach fined
(Photo: Singapore Food Agency)

COVID-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தை மீறிய இரண்டு மதுபானக் கடைகளுக்கு தலா S$1,000 அபராதம் மற்றும் 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் கீழ், இந்த 3ஆம் கட்டத்தின் போது இரவு 10.30 மணிக்குப் பிறகு அனைத்து உணவு மற்றும் பான கடைகளிலும் மதுபானம் வழங்குவதும் உட்கொள்வதும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டு ஊழியரின் தன்னலமற்ற செயல்!

இதனை சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) மற்றும் சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 7ஆம் தேதி, இரவு 11.20 மணியளவில், பிளாக் 632 புக்கிட் படோக் சென்ட்ரலில் உள்ள Happy Hawkers நிலையம் மதுபானங்கள் விற்பனை செய்ததை SFA மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதே போல கடந்த ஜனவரி 14ஆம் தேதி இரவு 10.50 மணியளவில், பிளாக் 31 கெலாந்தன் லேனில் உள்ள Bistro 8 நிலையத்திலும் மது அருந்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கோவிட் -19 தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது, இதில் கவலை இல்லாமல் செயல்பட வேண்டாம் என்று SFA மற்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து வர்த்தகங்களும் மற்றும் பொதுமக்களும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் சோதனை நடவடிக்கை.. 4 பேர் கைது, 2 கிலோவுக்கு மேல் போதைப்பொருள் பறிமுதல்!