COVID-19: சிங்கப்பூரில் 138 SIA மற்றும் சில்க் ஏர் விமான சேவைகள் நிறுத்தம்..!

COVID-19: Singapore Airlines slashes 96% of capacity
COVID-19: About 138 SIA and SilkAir planes, out of a total fleet of 147, will be grounded.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) அடுத்த மாதம் இறுதி வரை திட்டமிடப்பட்டிருந்த அதன் செயல்திறனில் 96 சதவீதத்தை குறைக்க உள்ளதாக (மார்ச் 23) தெரிவித்துள்ளது.

COVID-19 பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலகெங்கிலும் எல்லைக் கட்டுப்பாடுகள் கூடுதலாக கடுமையாக்கபட்டது.

இதனை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக SIA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி..!

மொத்தம் 147 விமானங்களில் சுமார் 138 SIA மற்றும் சில்க் ஏர் விமான சேவைகள் நிறுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், நிறுவனத்தின் மலிவு கட்டண விமான சேவையான ஸ்கூட், அதன் பெரும்பாலான சேவைகளை நிறுத்தி வைக்கும்.

மேலும் அதன் 49 விமானங்களில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தையும் நிறுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

SIA குழுமம், இந்த கடினமான சூழலில் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூருக்குள் நுழையவோ அல்லது செல்லவோ இவர்களுக்குத் தடை..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil