COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

COVID-19: Singapore report Singapore report
COVID-19: Singapore report Singapore report (Photo: TODAY)

சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதில் 73 வயதான சிங்கப்பூர் ஆடவர், அதாவது சம்பவம் 4689 என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் – மனிதவள அமைச்சகம்..!

COVID-19 காரணமாக வியாழக்கிழமை ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் இறந்த 23வது நபர் இவர் ஆவார்.

அவருக்கு கடந்த மாதம் ஏப்ரல் 17 அன்று COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், உயர் இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஆகிய பிரச்சனைகள் இருந்ததாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

தொற்று நோய்களுக்கான தேசிய மையம் அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது, மேலும் அவர்களுக்கு தேவியான உதவிகளை வழங்கி வருகிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்கதங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி உடையோர் இனி சமூகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவர்..!