சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 60,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் இடவசதிகள்..!

COVID-19: Singapore to build new dormitories with improved living standards for migrant workers
COVID-19: Singapore to build new dormitories with improved living standards for migrant workers (Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் தற்போதைய அதிக அளவைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசாங்கம் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைக் கட்டும், மற்றும் பயன்படுத்தப்படாத சொத்துக்களை மறுசீரமைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 60,000 ஊழியர்களுக்கு கூடுதல் இட வசதிகள் உருவாகும் என்று தேசிய மேம்பாட்டு அமைச்சகம் (MND) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) திங்களன்று (ஜூன் 1) ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

குறைந்த அளவு ஊழியர்கள் தங்கும் வகையில் மிக விரைவாக கட்டக்கூடிய திடீர் தங்கும் விடுதிகளும் இதில் அடங்கும். இந்த தங்கும் விடுதிகள் சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும், மொத்தம் சுமார் 25,000 பேர் தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரான்ஜி, துவாஸ், அட்மிரால்டி, சோவா சூ காங் (Choa Chu Kang) மற்றும் டம்பைன்ஸ் உள்ளிட்ட எட்டு இடங்களில் புதிய திடீர் தங்கும் விடுதிகள் 2020 இறுதிக்குள் உருவாக்க ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பள்ளிகள் மற்றும் காலியாக உள்ள தொழிற்சாலைகள் உட்பட பயன்படுத்தப்படாத அரசு சொத்துக்கள் சுமார் 25,000 ஊழியர்களை தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்காலிக விடுதிகளை உருவாக்க அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், அதாவது அந்த தற்காலிக தங்கும் விடுதிகள், ஊழியர்கள் தங்கள் வேலை இடத்திற்கு அருகில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் சுமார் 11 தங்கும் விடுதிகள் தயாராக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் சார்ந்திருப்பை குறைக்க வழி உண்டு – அமைச்சர் சான்..!