சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் கடுமையாகும் எல்லை நடவடிக்கை!

COVID-19 Singapore
(Photo: TODAY)

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் உட்பட அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வந்தவுடன் COVID-19 கிருமித்தொற்றுக்கான PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) சனிக்கிழமை (ஜனவரி 16) தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் COVID-19 பாதிப்புகளின் அபாயத்தை கட்டுப்படுத்த கடுமையான எல்லை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அந்த சோதனை நடவடிக்கை வரும் ஜனவரி 24ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

மோசடி: 251 சந்தேக நபர்களிடம் காவல்துறை விசாரணை…

தனிமை முடிந்த பிறகு மேற்கொள்ளப்படும் PCR சோதனை உட்பட தற்போதுள்ள “வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு” தேவைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவ சோதனை நடைமுறையை எளிதாக்க, பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னர் பதிவுசெய்ய ஊக்குவிக்கப்படுவதாக MOH தெரிவித்துள்ளது.

72 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனை

தற்போது, ​​சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாதவர்கள் மற்றும் அதிக கிருமித்தொற்று ஆபத்துள்ள நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கு சமீபத்திய பயணம் மேற்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனை செய்ய வேண்டும்.

அவர்கள் தனிமை காலம் முடிவில் மீண்டும் சோதிக்கப்படுவர்.

இனி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிக்கலாம்!

UK மற்றும் தென்னாப்பிரிக்கா

பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பும் அனைத்து சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் தங்களின் வசிப்பிடத்தில் கூடுதலாக ஏழு நாட்கள் சுய-தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை நாளை ஜனவரி 18 இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அது SafeTravel இணையதளத்தில் புதுப்பிக்கப்படும்.

சிங்கப்பூரில் நடைபாதையில் சென்ற சிறுமி மீது சைக்கிளில் மோதிய ஆடவர் கைது