COVID-19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் தெம்பனிஸ் தங்கும்விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

COVID-19: Tampines Dormitory declared isolation area under Infectious Diseases Act
COVID-19: Tampines Dormitory declared isolation area under Infectious Diseases Act

சிங்கப்பூரில் ஐந்தாவது வெளிநாட்டு தொழிலாளர் தங்குமிடமாக, தெம்பனிஸ் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விடுதியில் COVID-19 நோய் பரவல் அல்லது நோய் பரவும் சாத்திய கூறுகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் அந்த தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: இந்தியரின் மரணத்துக்கு வைரஸ் தொற்று காரணம் இல்லை: சுகாதார அமைச்சகம் (MOH)..!

நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 9) நிலவரப்படி, 2 தெம்பனிஸ் பிளேஸில் (2 Tampines Place) உள்ள தெம்பனிஸ் தங்கும் விடுதியுடன் மேலும் 17 நபர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக MOH குறிப்பிட்டுள்ளது, மொத்தம் 38 COVID-19 சம்பவங்கள் அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் ஏற்கனவே 4 தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

S11 Dormitory @ Punggol மற்றும் Westlite Toh Guan ஆகிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக கடந்த ஞாயிற்றுகிழமை அறிவிக்கப்பட்டது.

நேற்று (ஏப்ரல் 9) நான்காவது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியாக, சுங்கை தெங்கா தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியான சுங்கை தெங்கா லாட்ஜ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!