தேக்கா நிலையம், அதைச் சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கு கொரோனா சோதனை!

Surveillance testing will be extended to stallholders in and around Tekka Centre
Surveillance testing will be extended to stallholders in and around Tekka Centre (Photo Screengrab from Google Street View)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றுக்கான சமூக கண்காணிப்பு சோதனை தேக்கா நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.

லிட்டில் இந்தியா MRT ரயில் நிலையம் அருகே இன்று வியாழக்கிழமை இந்த சோதனை நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திற்கான இந்தியா-சிங்கப்பூர் செல்லும் இருவழி விமானங்கள்

சமூகத்தில் கிருமித்தொற்று கண்டறிதலை எளிதாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் விரிவான சோதனை முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும் என்று MOH கூறியுள்ளது.

இதில் சுமார் 45,000க்கும் மேற்பட்டவர்களுக்கு COVID-19 சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கடந்த மாதம் தெரிவித்தனர்.

மேலும், இந்த சோதனை நடவடிக்கையானது படிப்படியாக சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், உணவு விநியோக ஊழியர்கள் மற்றும் காசாளர்களுக்கு இந்த கண்காணிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக MOH புதன்கிழமை குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் நேற்று புதன்கிழமை நிலவரப்படி 58,190 COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு 300க்கும் மேற்பட்டோர் பயணம்

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…