வரும் வாரங்களில் முக்கிய விநியோக நிறுவன ஊழியர்களுக்கு COVID-19 சோதனை – MOH..!

COVID-19 key delivery centres
(Photo: MOM)

வரும் வாரங்களில் COVID-19 கிருமித்தொற்றுக்கான சோதனைகள், முக்கிய விநியோக நிலையங்கள் மற்றும் முக்கிய தளவாட விநியோக நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை (நவம்பர் 26) தெரிவித்துள்ளது.

அதாவது இந்த சோதனை, பாசீர் பஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் மற்றும் முக்கிய தளவாட விநியோக நிறுவனங்கள் போன்ற முக்கிய விநியோக நிலையங்களில் உள்ள ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும்.

கடந்த 16 நாட்களில் பதிவான உள்நாட்டில் முதல் தொற்று பாதிப்பு!

இந்த COVID-19 சோதனைகள் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றுக்கான சமூக கண்காணிப்பு சோதனை தேக்கா நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதில் சுமார் 45,000க்கும் மேற்பட்டவர்களுக்கு COVID-19 சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கடந்த மாதம் தெரிவித்தனர்.

வரும் சனிக்கிழமை இரவு 11.59 மணி முதல், பின்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு கடைசி 14 நாட்களில் பயணம் மேற்கொண்ட பயணிகள், சிங்கப்பூர் வரும்போது அரசால் வழங்கப்பட்டுள்ள இடவசதிகளில் “வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பை” நிறைவேற்ற வேண்டும் என்றும் MOH அறிவித்துள்ளது.

COVID-19: விதிகளை மீறிய 6 பேருக்கு தலா S$3,000 அபராதம் விதிப்பு!

குழந்தையுடன் கவலை மறந்து விளையாடும் வெளிநாட்டு ஊழியர்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…