சிங்கப்பூரில் மேலும் 3 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

COVID-19: Three more foreign worker dormitories gazetted as isolation areas
COVID-19: Three more foreign worker dormitories gazetted as isolation areas

COVID-19 கிருத்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சிங்கப்பூரில் மேலும் மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

Tuas View Dormitory, Shaw Lodge Dormitory, North Coast Lodge ஆகியவை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று அரசிதழில் சுகாதார அமைச்சின் (MOH) அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : விதிமுறைகளை மீறி லாரியில் ஊழியர்களை ஏற்றிச்சென்ற 28 முதலாளிகளுக்கு தலா $1,000 அபராதம்..!

இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மொத்தம் 12 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன, இதில் Mandai Lodge, Cochrane Lodge 2, Acacia Lodge மற்றும் Cochrane Lodge 1 ஆகியவையும் அடங்கும்.

Tuas View Dormitory விடுதியில் மொத்தம் 73 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், Shaw Lodge Dormitory விடுதியில் 28 பேருக்கும், North Coast Lodge விடுதியில் 26 பேருக்கும் COVID-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்களுக்கு காணொளி வெளியிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின்..!