சிங்கப்பூர் அதிக ஆபத்துள்ள நாடு என COVID-19 பயண ஆலோசனையை வெளியிட்ட நாடு

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூருக்கான தனது COVID-19 பயண ஆலோசனையை “அதிக ஆபத்து” வகைக்கு அமெரிக்கா நேற்று திங்களன்று (அக்டோபர் 18) உயர்த்தியுள்ளது.

பயணிகள் சிங்கப்பூர் நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.

சாலையில் லாரியை கவனமாக ஓட்டினால் பல்வேறு விபத்துகளை தவிர்க்கலாம் – காணொளி

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் (CDC) சிங்கப்பூரை 4வது நிலைக்கு மாற்றியுள்ளது, அதாவது அது கோவிட்-19 தாக்கத்தின் மிக உயர்ந்த நிலையை குறிக்கிறது.

“சிங்கப்பூரில் தற்போதைய சூழல் காரணமாக, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கூட COVID-19 கிருமியால் பாதிப்பதற்கும், மேலும் அதனை பரப்புவதற்கும் ஆபத்து இருக்கலாம்” என்று CDC கூறியது.

கோவிட்-19 காரணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை திங்கள்கிழமை இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல தற்போது நிலை 4ல் புருனே, மலேசியா, தாய்லாந்து மற்றும் UK ஆகிய இடங்களும் உள்ளன.

கிட்டத்தட்ட 700 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – Giant அதிரடி