COVID-19: சிங்கப்பூரில் மேலும் 12 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

COVID-19: Twelve new clusters, including one at the Institute of Mental Health, were identified
COVID-19: Twelve new clusters, including one at the Institute of Mental Health, were identified

சிங்கப்பூரில் மேலும் 12 COVID-19 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது.

  • மனநல சுகாதாரக் கழகம் (Institute of Mental Health)
  • 9 Benoi Crescent
  • 24 Benoi Place
  • 2 Fan Yoong Road
  • 10 Gul Drive
  • Kaki Bukit Road 6
  • 17 சூன் லீ ரோடு (17 Soon Lee Road)
  • JTC Space @ Tuas
  • 1 துவாஸ் அவென்யூ 10
  • 2 துவாஸ் அவென்யூ 10
  • 81 துவாஸ் சவுத் ஸ்டீரீட் 5
  • 54/56 Tuas View Square

சிங்கப்பூரில் நேற்றைய (ஏப்ரல் 30) நிலவரப்படி, புதிதாக 528 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 16,169ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 31 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 85 சதவீதம், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சியோர், தொடர்புகள் கண்டறியும் பணி நிலுவையில் உள்ளது.