COVID-19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியருக்கு கிருமித்தொற்று!

COVID-19 cases in Singapore
(Photo: TODAY)

சிங்கப்பூரில் நேற்று தங்கும் விடுதியில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அவர் தனது COVID-19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர் என்ற தகவலை அமைச்சகம் கூறியுள்ளது.

உறவுகளை பிரிந்து வாழும் வெளிநாட்டு ஊழியர்கள்… திறமைகளை விட்டு பிரிவதில்லை!

மேலும், இந்த சம்பவம் தடுப்பூசி போட்ட நபர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை நினைவூட்டுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான அந்த ஊழியர், சீஃப்ரண்ட் சப்போர்ட் (Seafront Support) கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

அவர் பிரானி டெர்மினல் அவென்யூவில் (Brani Terminal Avenue) அமைந்துள்ள தங்கும் விடுதியில் வசிக்கிறார்.

அவருக்கு கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தனிப்பட்ட கிருமி சோதனை மேற்கொள்ளப்பட்டது, பின்னர் மறுநாள் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அந்த ஊழியர் தனது முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை ஜனவரி 25 அன்றும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பிப்ரவரி 17 அன்றும் போட்டுக்கொண்டார்.

அப்பர் புக்கிட் திமாவில் மரத்தில் இறந்த நிலையில் தொங்கிய ஆடவர்

Verified by MonsterInsights